×

விஜயகரிசல்குளம் அகழாய்வில் செங்கல், கருங்கல் கண்டுபிடிப்பு

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளம் பகுதியில் நடந்து வரும் 2ம் கட்ட அகழாய்வில் நேற்று கருங்கல் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில், 2ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு, பொதுமக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பணியில் பலங்கால செங்கல் மற்றும் கருங்கல் குவியல் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வில் இதுவரை 13 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட 6 குழிகளில் சுடுமண்ணாலான புகைப்பிடிப்பான் கருவி, காதணி, எடைக்கல், பதக்கம் கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் ஆன பகடை, தக்களி, தங்க அணிகலன் உள்ளிட்ட 1960 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட குழியில் முன்னோர்கள் கட்டடங்களில் வசித்ததற்கான அடையாளமாக செங்கல், கருங்கல் குவியல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில், முழு செங்கல் மற்றும் கருங்கல் குவியல் கிடைத்துள்ளது. இது குறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் கூறியதாவது: அகழாய்வு பணியின்போது செங்கல், கருங்கல் குவியல்கள் கிடைத்துள்ளது. செங்கல் நீளம் 36 செ.மீ., அகலம் 16 செ.மீ., தடிமன் 6 செ.மீ., ஆகும். தற்போது நாம் பயன்படுத்தும் செங்கலை விட நீளம் அகலம் கூடுதலாக உள்ளது எனவும் முன்னோர்கள் இங்கு வசித்ததற்கான முழு அடையாளம் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் செங்கல், கருங்கல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakarisalkulkulam ,Vijayagarisalkulam ,Wembakota ,Virutunagar ,Visayakarisalkulam ,
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து